"எல்லோராலும் MGR, ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது.." தவெகவை விமர்சித்த துரை முருகன் - முழுமையாக பேசியது என்ன?

"ஆளுங்கட்சியினர்தான் அதிகமாக போதைப்பொருள்கள் விற்பனைச் செய்வதாக செய்திகள் வருகிறது. இதற்கெல்லாம் விளக்கம் வேண்டும்." - துரைமுருகன்
"Everyone cannot become MGR or Joseph Vijay" – Durai Murugan criticizes TVK, what did he fully say?
"எல்லோராலும் MGR, ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது.." தவெகவை விமர்சித்த துரை முருகன் - முழுமையாக பேசியது என்ன?
Published on: 
Updated on: 
1 min read

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திமுக துணைப் பொதுச் செயலாளர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதல் தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சியாக காட்டிக்கொள்ள முயற்சி செய்துள்ளார். முதலமைச்சரான பிறகு பகிரங்கமாக அதை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்த துரைமுருகன், எம்.ஜி.ஆர் - விஜய்யை ஒப்பிட்டு பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

மர்மமான அரசாங்கம்!

இன்று அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த துரை முருகன், "இந்த ஆட்சியில் எல்லாமே மர்மமாக இருக்கிறது. வெளிப்படையாக எந்தச் செயல்களுமே நடைபெறுவதில்லை. மழைக்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த அரசு அதைச் செய்யவில்லை.

எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும். மின்சாரம் வாங்குவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நம்மிடம் போதிய அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி இருந்தும்கூட `ஏன் வெளியில் இருந்து வாங்குகிறோம்?’ என்று இவர்கள் கூறுவதில்லை. இது ஒரு மர்மமான அரசாங்கம்." என விமர்சித்துள்ளார்

"ஆளுங்கட்சிதான் போதைப்பொருள் விற்பனை செய்கிறது"

மேலும் சட்டம் ஒழுங்கு குறித்து, "நமக்கு கண்ணும், காதுமாக இருப்பது பத்திரிகைச் செய்திகள்தான். ஒருநாள் தவறாமல் 8 பக்க பத்திரிகைச் செய்திகளில் 80 கொலைச் செய்திகள் இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போயிருக்கிறது. காவல்துறையினரிடம் சரியான அணுகுமுறை இல்லையா? என்று தெரியவில்லை. அதேபோல, ஆளுங்கட்சியினர்தான் அதிகமாக போதைப்பொருள்கள் விற்பனைச் செய்வதாக செய்திகள் வருகிறது. இதற்கெல்லாம் விளக்கம் வேண்டும்." என விமர்சித்துள்ளார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, "ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அதேபோன்று மற்றவர்களும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது" என பதிலளித்துள்ளார். இதுதான் இப்போது பேச்சு பொருளாகியிருக்கிறது.

துரைமுருகன் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசும் பழக்கத்துக்காக அறியப்படுகிறார். அந்த வகையில் இதுவும் ஒரு தன்னிச்சையான பதிலாகப் பார்க்கப்படுகிறது.

"Everyone cannot become MGR or Joseph Vijay" – Durai Murugan criticizes TVK, what did he fully say?
"தனுஷ், அடுத்த விஜய்யா (அ) அண்ணாமலையா?.." பாஜகவின் 'D' பிளான்.. தயாராக உள்ளதா தவெக?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com