வெற்றி சான்றிதழ் பெற்ற ஈவிகேஎஸ்... பெரிய தோல்வியை சந்தித்த அதிமுக!!!

வெற்றி சான்றிதழ் பெற்ற ஈவிகேஎஸ்... பெரிய தோல்வியை சந்தித்த அதிமுக!!!

Published on

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று  காங்கிரஸ்  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து, ஈரோடு தேர்தல் அலுவலகத்திற்கு  வருகை தந்த ஈவிகேஎஸ் தேர்தல் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழை பெற்று கொண்டார். 

ஜெயலலிதாவிற்கு பிறகு:

அதற்கு முன்னதாக  செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறிய அவர் மேலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com