தமிழ் நாட்டில் பாஜக மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேறியபோது இவரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. தமிழ்நாடு போன்று ஒரு மாநிலத்தில் அதன் மரபு சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ள பாஜக போன்றதொரு கட்சியை வலுவாக்கியத்தில் இந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியின் பங்களிப்பு முக்கியமானது.
அண்ணாமலை 2020 -ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து
பாஜக -ல் இணைந்தார். ஒரே ஆண்டில் தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற போது வியப்பும், சர்ச்சையும் ஒருசேர கிளம்பியது.
பாத யாத்திரை, சாட்டையடி போராட்டம், “பிண அரசியல்” உள்ளிட்ட பல சமகால அரசியல் வார்த்தைகள் காதில் விழுந்தாலே அண்ணாமலை தான் நம் நினைவுக்கு வருவார். மேலும் திமுக -ன் ஊழல் விவகாரங்களை பட்டியலிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். இவரின் ஆக்ரோஷமான பேச்சு, உடல் மொழி ஆகியவை இளைஞர் கூட்டத்தை பாஜக -இல் இழுத்தது.
பாஜக -இல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி உண்டு. அதன் அடிப்படையில் இம்முறை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இபிஸ் அண்ணாமலை மோதல்
“அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்” என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை ஏற்கனவே பேசியிருந்தார், இதன் விளைவாக இபிஸ் -க்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருந்தது.
இம்முறை பாஜக தனித்து போட்டியிட்டால் அது திமுக -விற்கு வலு சேர்ப்பதாகிவிடும், எனவே மாநில தலைவர் பதவியை நாகேந்திரனுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும் என பாஜக தலைமை முடிவு செய்ததாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது. இதுகூட அண்ணாமலை மாநில தலைவராக தேர்வு செய்யப்படாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..
எது எப்படியோ.. அடுத்து நடக்க வேண்டிய வேலையை பார்க்க வேண்டுமல்லவா..
தமிழ் நாடு பாஜக வரலாற்றில் மாநில தலைவர்கள் பதவிலியிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு உயர்பதவிகள் கொடுப்பது வழக்கம். (ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள்)அந்த வரிசையில் தற்போது அண்ணாமலையும் இணைந்துள்ளாரா? என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் நிறைந்து உள்ளது.
அண்ணாமலையின் பாஜக -விற்கு செய்த பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாராட்டி எக்ஸ் தளத்தில் ‘கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையை பாஜக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் ” என பதிவிட்டிருந்தார்..
இந்த பதிவில் உள்ள “தேசிய கட்டமைப்பு“ என்ற வார்த்தையை வைத்து அவருக்கு, தேசிய செயலாளர் பதவியோ, இணை அமைச்சர் பதவியோ கொடுக்க வாய்ப்பு உண்டு, வயது காரணமாக ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என மூத்த பத்திரிகையாளர்கள் கணித்து வருகின்றனர்…
இந்நிலையில் அண்ணாமலை ஆந்திராவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் மத்திய பாஜக தலைமை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் மகிழ்சியில் திளைத்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை வெளியேறியபோது அவர் மன வருத்தத்தில் இருந்ததாக பல தகவல்கள் கசிந்தன..இப்போது நடப்பதை வைத்து பார்த்தால் கட்சித்தலைமை அவரின் கவலையை கண்டு கொண்டதாகவே தெரிகிறது…!
பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை வெளியேறிய இமயமலை சென்றபோது பல காரணங்கள் சொல்லப்பட்டன, அதில் முக்கியமாக சொல்லப்பட்ட ஒரு காரணம் “அவர் மன வருத்தத்தில் இருந்ததாலே இமயமலை செல்கிறார்” என்பது..இப்போது நடப்பதை வைத்து பார்த்தால் கட்சித்தலைமை அவரின் கவலையை கண்டு கொண்டதாகவே தெரிகிறது…!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்