அளவுக்கு அதிகமாக மாசடைந்த நீர்; தாமிரபரணி பாதுகாப்பு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்! 

அளவுக்கு அதிகமாக மாசடைந்த நீர்; தாமிரபரணி பாதுகாப்பு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்! 
Published on
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் சென்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தாமிரபரணி பாதுகாப்பு ஆணையம் அமைக்க கோரி வலியுறித்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ளது பாபநாசம் கோவில். இந்த கோவிலின் பின்புறம் உள்ள வழியாக எந்த வாகனனின் உள்ள செல்லமுடியாத வகையில், அடைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து, அகஸ்தியர் அருவி மீட்பு குழு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சமீப காலமாக அங்கு அவ்வவ்போது பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பாபநாசம் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர், பாபநாசம் தலையணை, மண்டபங்கள் போன்ற இடங்களை ஆய்வு செய்தார். 

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி என்பது தமிழர் மற்றும் தமிழ் மொழியின் வரலாறு. வைகை, காவேரி, பாலாருக்கு பின் தாமிரபரணி தமிழ்நாட்டின் அடையாளமாக காணப்படுகிறது. நெல்லை மாநகராட்சி கழிவு நீரை தாமிரபரணி நதியில் கலக்குகிறது. தாமிரபரணியை பாதுகாக்க தமிழக அரசு தாமிரபரணி பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுக்கு தான் கடிதம் எழுத உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும், பாபநாசம் கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதிக்கு செல்வதற்கு கேட் போடுவது பணம் வசூலிப்பதற்காக தானே தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை. கோவில் ஸ்தலங்கள் பக்தர்களுக்கு உரியதே தவிர இதில் அரசும், மாவட்ட நிர்வாகமும் சொந்தம் கொண்டாட முடியாது. நதி கரையில் இறப்பவர்களை குறித்து காவல் துறை கண்காணிக்க வேண்டுமே தவிர நதிநீரில் குளிப்பதற்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை, எனவும் கூறியுள்ளார்.

சமீபத்தில், தாமிரபரணி நீர் அளவுக்கு அதிகமாக மாசு அடைந்து அதனை குடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாக பரிசோதனை ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com