போலி ஆவணங்கள் தயாரித்து 2 கோடி கடன் - கோல்ட் ரவி கைது

சென்னை வேளச்சேரியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி கைது .
gold ravi news
gold ravi news
Published on
Updated on
1 min read

சென்னை வேளச்சேரி அருகே உள்ள 200 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து கடன் பெற்றதாக காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் தெற்கு பகுதி அதிமுக செயலாளராக இருப்பவர் கோல்ட் ரவி இவர் வேளச்சேரியில் உள்ள வேறு ஒரு நபரின் நிலத்தை போல ஆவணம் மூலம் தனது பெயருக்கு மாற்றி அந்த நில பத்திரத்தை காஞ்சிபுரம் தேரடி வீதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடன் பெற்றுள்ளார் கடனை திரும்பவும் செலுத்தாமல் ஏமாற்றி உள்ளார் மேலும் கோல்ட் ரவி வாங்கிய நிலத்தை இந்தியன் வங்கி வேறொரு நபருக்கு ஏலத்தின் மூலம் கொடுத்துள்ளது அந்த நபர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தபோது போலி ஆவணம் மூலம் கோல்ட் ரவி தனது பெயருக்கு நிலத்தை கிரயம் செய்தது தெரியவந்தது இதனை எடுத்து இந்தியன் வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோல்ட் ரவி காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com