"மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை.." - மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த தவெக IT Wing! விவாதத்தை கிளப்பிய ஒற்றை பதிவு

கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது
TVK IT Wing
TVK IT Wing
Published on
Updated on
1 min read

இன்று காலை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ X தளத்தில், முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஸ்டாலினின் மிசா கைது குறித்தும் சர்க்காரியா கமிஷன் குறித்தும் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காணொளி ஒன்றினை வெளியிட்டார். அதில் அவர், தான் மிசாவின் போது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்தும், சிறைவாசம் எந்த அளவிற்கு கொடுமையானது என்றும் அந்த காணொளியில் பேசியிருந்தார். மேலும், தேர்தல் முடிந்த பிறகு தன்னை சந்தித்தபோது, "தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்து பேசிவிட்டேன் "I'm sorry sir" என்று சொன்னீர்கள். அதற்கு நான் பரவாயில்ல Brother அதையெல்லாம் நான் மனசுல வைத்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தில் முதலமைச்சர், யாரைப்பற்றி பேசினாலும் அந்த கண்ணியதோடு பேசுங்கள் என்று உங்களிடம் கூறினேன். அத எல்லாம் நீங்கள் மறந்துடீங்க போல" என்று அன்று தாங்கள் பேசியதை நினைவூட்டினார்.

மேலும், "திரும்பவும் சொல்கிறேன், ஒரு முதலமைச்சருக்கான வார்த்தைகளும், உடல் மொழியும் இருக்கவேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை அந்த மறந்து விடாதீர்கள். அந்த பெரிய பொறுப்பினை உணர்ந்து நீங்கள் செயல்படனும். சட்டமன்றத்தினை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றுவதும், நாங்கள் கட்டிய பாலத்தின் மீதிருந்து போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் போலவே நடத்துகிறீர்கள். உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க விதவிதமா ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். ஆனா.. ரியாலிட்டி என்ன?" என்று கேள்விகளையும் எழுப்பினார்.

இதனையடுத்து, அவரது பதிவிற்கு எதிர்வினையாற்றும் வண்ணம் தவெக ஐடி வீங் ஒரு பதிவினை தங்களது சமூகவலைதளபக்கதில் பதிவிட்டுள்ளனர். "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?. எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை. உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன. கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி" என்று கூறி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com