பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்று ஆரம்பம்...!

பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்று ஆரம்பம்...!
Published on
Updated on
1 min read

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று நிறைவடைந்து இரண்டாவது சுற்று தொடங்கியது.

இரண்டாவது சுற்று :

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டில்  700 க்கும் மேற்பட்ட காளைகளும், 250 க்கும் அதிகமான மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். முன்னதாக, வாடி வாசலில் இருந்து  கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  இதை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம், 45 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், முதல் சுற்று முடிவடைந்த சூழலில், இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காளைகளை அடக்கி பரிசுகளை வீரர்கள் அள்ளி வருகின்றனர். அதேபோல்  வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிபாய்ந்த  காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு  பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com