பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று துவக்கம்...முதல் சிறப்பு ரயில் எங்கே?

பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று துவக்கம்...முதல் சிறப்பு ரயில் எங்கே?
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்க உள்ளது.

5 சிறப்பு கட்டண ரயில்கள் :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் :

அதன்படி, ஜனவரி 12-ம் தேதி தாம்பரம் - நெல்லை ரயில் இரவு 9 மணிக்கும் , ஜனவரி 13-ம் தேதி நெல்லையிலிருந்து எழும்பூருக்கு மதியம் 1 மணிக்கும், இதேபோல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கும் , மறு மார்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும்,  சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் என 5 சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமான நிலையில், துவங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்று தீர்ந்தது. இதேபோல் தட்கள் முன்பதிவு நேற்றைய தினம் துவங்கிய நிலையில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தன.

முதல் சிறப்பு ரயில் இன்று துவக்கம் :

இந்நிலையில் ரயில் நிர்வாகம் அறிவித்த 5 சிறப்பு கட்டண் ரயில்களின் இயக்கமானது இன்று துவங்க உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய முதல் சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரக்கூடிய மற்றொரு சிறப்பு ரயில் இன்று இரவு 11:15 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com