ஃபர்ஹானா இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை!!!!

ஃபர்ஹானா இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை!!!!
Published on
Updated on
2 min read

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லே மேஜிக் லான்டேன் திரையரங்கில் நேற்று இயக்குனர்  நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில்  வெளிவந்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த  ஃபர்ஹானா திரைப்படம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு,இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்,எழுத்தாளர் வசனகர்த்தா மனுஷ்ய பத்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில் ஒரு திரையரங்கில் மட்டும் தான் படம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.ஆனால் நிறைய திரையரங்குகளில் ரத்து என தவறான தகவல் பரவி வருகிறது.இது அனைவருக்குமான படமாகவும் குடும்ப படமாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


குழந்தைகளுக்கான படமா என்றால் அது இல்லை ஆனால் குடும்பங்களுக்கான படம்.எனவே யாருக்கும் தயக்கம் வேண்டாம் அனைவரும் வந்து திரையரங்குகளில் பார்க்கலாம்.உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் ஒரு திரையரங்கில் மட்டும் தனிப்பட்ட காரணத்திற்காக படம் திரையிடப்படவில்லை. இதுஇஸ்லாமியர்களுக்கான எதிரான படம் இல்லை என்றும் தெரிவித்தார்

.இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்

நல்ல படங்களை மட்டும் தான் இயக்குவேன் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறேன்.படத்தை பார்த்தவர்கள் யாரும் படத்தை பற்றி தவறாக சொல்லவில்லை.படத்தை பார்க்கதாவர்கள் தான் தவறாக சொல்லகிறார்கள்.இந்த படம் ஒரு உளவியல் சார்ந்த படம் எல்லோரும் பார்க்க  வேண்டிய படம் என்று தெரிவித்தார்.தைரியமாக இந்தப் படத்தை தைரியமாக பார்க்கலாம்.குழந்தைகளுக்கான படமும் தான்.நேற்றைய தினத்தில் படம் சில இடங்களில் தடைபட்டு நிறுத்தப்பட்டாதாக செய்திகள் பரவி வந்தது
அதை நம்ப வேண்டாம் எனவும் படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com