தமிழக சட்டப்பேரவையில் வரும் 14-ம் தேதி வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்துறை இயக்குநர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கருத்துகளை கேட்டறிந்தார்.