முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வளர்த்து வந்த பெண் யானை உயிரிழப்பு!!!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வளர்த்து வந்த பெண் யானை உயிரிழப்பு!!!!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பு நடேசன் அவர்கள் தனது கல்வி குழும வளாகத்தில் வளர்த்து வந்த சொர்ணாவதி (70).இந்த யானை சுமார் 58 வருடங்களாக பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.யானை நேற்று காலையில் இருந்து சோர்வாக காணப்பட்டது.

மேலும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென யானை மயங்கி கீழே விழுந்தது மேலும் மருத்துவர்கள் யானையை எழுப்புவதற்கு நீண்ட நேரம் போராடியும் முயற்சி தோல்வியுற்ற நிலையில் நேற்று மாலையில் யானை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து இந்நிலையில் இன்று காலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா மற்றும் குலசேகரம் வனக்கோட்டத்திற்குட்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்கான  வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக சுற்றுவட்டாரம் தெரிவித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனை பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் .மேலும் யானையின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு  தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com