அனல் பறக்கும் பிரசாரம்...களத்தில் முழு வீச்சில் இறங்கிய அதிமுக...!

அனல் பறக்கும் பிரசாரம்...களத்தில் முழு வீச்சில் இறங்கிய அதிமுக...!

Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் பிப்ரவரி 25-ம் தேதியோடு பிரசாரம் ஓய்வு பெறுவதால், ஒவ்வொரு கட்சியின் வேட்பாளரையும், அக்கட்சியின் தலைவர்கள் ஆதரித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், அதிமுக சார்பில் களம் காணும் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், சின்னையா, ராஜேந்திரன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக சார்பில் என்னென்ன நல்ல திட்டங்கள் செய்யப்படும் என்பதை எடுத்துக் கூறி, துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com