பிப்.22 ஆம் தேதி தொடங்கிய தவக்காலத்தின் இறுதி ஞாயிறு...குருத்தோலையுடன் சிறப்பு பிரார்த்தனை!

பிப்.22 ஆம் தேதி தொடங்கிய தவக்காலத்தின் இறுதி ஞாயிறு...குருத்தோலையுடன் சிறப்பு பிரார்த்தனை!
Published on
Updated on
1 min read

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடைபிடிக்கப்படும் தவக்காலத்தின் தொடக்கமாக இன்று குறுத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

சென்னை அடுத்த குரோம்பேட்டை அமல அன்னை தேவாலயம் சார்பில் குருத்தோலை அமைதி பவனி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட கிருத்துவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று தேவாலயத்தை அடைந்தனர். பின்பு சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டி புனித சவேரியார் ஆலயத்தில் குருத்து ஞாயிறு தினத்தையொட்டி குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆலய பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையில் பாடல்களை பாடியவாறு குருத்துகளை ஏந்தி கிறிஸ்தவ பொதுமக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஆர் சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி அனைத்து ஐக்கிய கிறிஸ்தவ சபைமார்கள் ஊர்வலம் சென்றனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை தூய சகாய அன்னை ஆலயத்தில் குருத்து ஒலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. காரைக்குடி அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், தூய சக அன்னை ஆலயம் வரையில் நடைபெற்றது. இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தி வழிபாடு செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com