ராமநாதபுரத்தில் மீனவர் நல மாநாடு...பல ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!!

ராமநாதபுரத்தில் மீனவர் நல மாநாடு...பல ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!!

Published on

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளாா். 

ராமநாதபுரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேராவூர் கிராமம் அருகே நேற்று நடைபெற்ற 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டாா். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதைத் தொடா்ந்து இன்று காலை, மண்டபத்தில் மீனவர்கள் நல மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு சாா்பில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 13 ஆயிரம் பேருக்கு சுமாா் 70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

இதற்கிடையே மாநாட்டுக்காக ஏற்பாடுகளை கட்சி நிா்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனா். மாநாடையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com