கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெள்ளத் தடுப்பு ஆய்வு!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெள்ளத் தடுப்பு ஆய்வு!!

Published on

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வெள்ளதடுப்பு குழு இன்று ஆய்வு செய்யவுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையொட்டி எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட வெள்ள தடுப்பு குழு அலுவலர்  ஜான் லூயிஸ் தலைமையில் ஆய்வு  நடைபெறவுள்ளது. 

சாலையின் இரண்டு ஓரங்களிலும் மழை நீர் செல்வதற்கு கால்வாய் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் பாதையை கடந்து தண்ணீரை எடுத்துச் செல்ல  கூடுதல் குழாய் பாலம் அமைத்து தர ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com