கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி. அணை அதன் கொள்ளளவை எட்டிவரும் நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 50.50 அடியை தாண்டியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 502 கனஅடியில் 439 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.