தெரியாமல் கை பட்டதற்கு தள்ளி நில் தொட்டு பேசாதே... கூறிய அலுவலரை கண்டித்து போராட்டம்

தெரியாமல் கை பட்டதற்கு தள்ளி நில் தொட்டு பேசாதே... கூறிய அலுவலரை கண்டித்து போராட்டம்
Published on
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம்

வேலூர் மாவட்டம் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பார்வையற்றோர் மாநிலம் முழுவதும் செல்ல  எங்களுக்கு இலவச பஸ் பாஸ்  வழங்க வேண்டும். மாவட்டத்தில் மட்டும் பயணிக்க தற்போது வழங்கப்பட்டுள்ள பயண அட்டையை புதுப்பித்து தருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மனு அளிக்க வந்தவர்களை அலுவலக ஊழியர் ரத்தினவேல் என்பவர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.. அப்போது ரத்தினவேல் மீது தெரியாமல் கை பட்டு விடவே கை வைத்து பேசாதே தள்ளி நின்று பேசு என ஒருமையில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வேறு வடிவம் எடுக்க துவங்கியுள்ளது...

உடனே அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பார்வையற்றவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதாகி விடுமோ என காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து போலீசார் குவியத்தொடங்கினர்.

பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும்

அப்போது அங்கு வந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து இந்த கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாக கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாவட்ட பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்படுவதால் முப்பது கிலோமீட்டருக்குள் ஒரு மாவட்ட எல்லை முடிந்துவிடுவதால் அவர்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை என தெரிவிக்கின்றனர் . ஆகவே தமிழகம் முழுவதும் செல்லும் அளவிற்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com