இந்தியா என்ற சொல்லே பாஜகைவை மிரட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும் இந்திய நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற சட்ட மசோதா அறிமுகபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி20 மாநாட்டிற்கு இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசு தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய பெயர் குறித்த சர்ச்சை தற்போது பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல, இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முடிந்திருப்பதாக விமர்சித்துள்ள முதலமைச்சர், பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டியதில் இருந்து இந்தியா என்ற சொல்லே கசப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:மாறுகிறது இந்திய நாட்டின் பெயர்?