தமிழ் நாட்டில் முதல் முறையாக 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை...!

தமிழ் நாட்டில் முதல் முறையாக  10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை...!
Published on
Updated on
1 min read


தமிழகத்தில் முதன்முறையாக  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலையத்தில் பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யும் நிலையத்தை அமைச்சர் மனோதங்கராஜ் துவங்கி வைத்தார்.

' கோ ஆப் அக்குவா ' என்ற பெயரில் செயல்படும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் விரைவில் இந்த திட்டத்தை துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.  நடைமுறையில், ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் பாதி விலையில் தண்ணீர் கிடைப்பது ஏழை நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் .

பேருந்து நிலையத்தில் டீ குடிக்க 12 ஆகும் நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் பத்து ரூபாய்க்கு கிடைப்பது பயணிகள் இடையே மிகுந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com