அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ந்து, ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்குவது, செய்தியாளர்களை சந்திப்பது என பரபரப்பாக சுழன்று வந்த ஓபிஎஸ், நேற்றிரவு திடீரென சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் சென்றிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.