
தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கை வழங்கியுள்ளது ஆனால் அதில் ஊழல் நடந்து உள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அளித்துள்ள விளக்கத்தில், தமிழகத்தில் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு துறையாக மட்டுமே உள்ளது,கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இல்லாத அளவிற்கு மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மின்சார விலையேற்றம் இல்லை என்றும் பொதுமக்களுக்கு மாதம் மாதம் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கி வருவதாகவும் இதனால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றார்.கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும் தமிழகத்தில் 11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி வருவது பொய் என்று கூறிய அவர் திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தணிக்கை துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வழங்கி இருப்பதாக கூறிய அவர் தணிக்கை துறை அனைத்து ஆட்சியிலும் இதனை இவ்வாறு செய்து இருந்தால் நஷ்டம் ஏற்பட்டு இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகின்ற நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக இருந்ததாக கூறினார்,மேலும் தற்போது இருக்கும் கடனில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு கடன் மட்டுமே என்று கூறிய அவர் தமிழகத்தில் அந்த பணிகள் முடியும் நேரத்தில் அதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்று கூறினார்.
2015 ஆம் ஆண்டு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க நிறுவனங்கள் தயாராக இருந்த நிலையில் 12 ரூபாய் 77 பைசாவிற்கு ஏன் ஒப்பந்தம் போடப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காரணத்தாலும் அதே போன்று குறைவான விலைக்கு ஒப்பந்தாம் வழங்க தயாராக இருந்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்க தயாராக இருந்ததாகவும் தமிழகத்தின் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் 1 ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்று தெரிவித்தார்.
இப்படி சீரியஸாக அமைச்சரின் ஊழல் புகாருக்கு, அந்தத்துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த தங்கமணியோடு அமர்ந்திருந்த, விருப்பமே இல்லாமல் இருக்கும் ஒருவரை அழைத்து வந்து அமரவைத்து போலவே சலிப்புடன் உட்கார்ந்திருந்தார். தங்கமணி பேச பேச ஒரு கட்டத்திற்கு மேல் டயர்ட்டாகிப்போன கோகுல இந்திரா குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு, தூங்கி தூங்கி விழுந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு முன்னாள் அமைச்சர் தான் வகித்த துறை மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போது, இப்படியா தூங்கி விழுவது என பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.