பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சி: தமிழக அரசு குற்றச்சாட்டு....

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சி: தமிழக அரசு குற்றச்சாட்டு....

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. 
Published on

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் புகாரில் விசாகா குழு விசாரணையை ரத்து செய்ய கோரி சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இதில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், விசாகா கமிட்டி விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை ஏற்கனவே  நிராகரித்துவிட்டதை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த அருண் என்ற அதிகாரி சிறப்பு  டிஜிபியின் கோரிக்கையின்படி மாற்றப்பட்டுவிட்டார் எனவும்  தெரிவித்துள்ளது.மேலும் இந்த வழக்கில்  விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com