வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி...! அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது...!

திண்டுக்கல்லில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி புகாரில், அதிமுக முன்னாள் கவுன்சிலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி...! அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது...!
Published on
Updated on
1 min read

திண்டுக்கல்லில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி புகாரில், அதிமுக முன்னாள் கவுன்சிலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சரவணன், செந்தில் முருகன், பிரகதா ஆகியோர் திண்டுக்கலைச் சேர்ந்தவர்கள். இவர்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், அதிமுக ஜெ பேரவை மாவட்ட இனணசெயலாளரும், அதிமுக முன்னாள் கவுன்சிலருமான சுருளிவேல் என்ற சோனா சுருளி (46) என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக தலா ரூ. 80 லட்சம், ரூ. 11 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் என்று சுமார் ரூ.1 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல், கடந்த 5 வருடமாக இழுத்தடித்து வந்ததாகவும், பணத்தை திரும்ப தர மறுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த மோசடி புகார் குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் பண மோசடி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும்  இவரிடம், வேறு எவரேனும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com