அனைத்து மதத்தினரும் பயன்படும் வகையில்  இலவச ஆம்புலன்ஸ் சேவை ...!

அனைத்து மதத்தினரும் பயன்படும் வகையில்  இலவச ஆம்புலன்ஸ் சேவை ...!
Published on
Updated on
1 min read

இன்று ரம்ஜான் நன்னாளை முன்னிட்டு உலகின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் வழிபட்டும் வாழ்த்துக்களை தெரிவித்து இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. 
இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். 

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால்  வழங்கப்பட்டதும்,  இந்த மாதம்  என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இவ்வாறிருக்க,  பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் மத நல்லிணக்க ரமலான் திருவிழா கொண்டாடப்பட்டது.  இதில் மக்கள் பயன்பெறும் வண்ணம், அனைத்து மதத்தினரும் பயன்படும் வகையில்  இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில்  மத நல்லிணக்க ரமலான் திருவிழா கொண்டாடபட்டது. மேலும் அனைத்து மத்த்தினர்களும் பயன்பெறும் வகையில் காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் 5 லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜமாத் நிர்வாகிகள் ,அரசியல் கட்சியினர் அனைத்து மதத்தினர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com