இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

அரசுப் பள்ளி மாணவர்ளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இலவச சைக்கிள்:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. 

நடப்பாண்டில் இலவச சைக்கிள் உண்டு:

கொரொனா தொற்று பரவல் தற்பொழுது குறைந்து காணப்படுவதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதல்வர் துவங்கி வைப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார்:

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை அவர் வழங்க உள்ளார். முதல் கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com