இலவச மின்சாரம், இலவச பஸ் பாஸ் இதெல்லாம் இப்போ தேவையா!? -சீமான் பேட்டி!

இது ஒருபக்கம் இருந்தாலும், ஆளுங்கட்சியான திமுக -வின் செயல்பாடுகள் குறித்து
seeman
seeman
Published on
Updated on
1 min read

 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும், தங்களுக்கு ஏற்றார் போல, தேர்தல் களத்தை வடிவமைத்து வருகின்றனர். இந்த சூழலில் யாருடனும் கூட்டணியே அமைக்காத சீமான், இம்முறை தேர்தல் களத்தில் சறுக்க வாய்ப்புள்ளது என்றும், எல்லோருடைய ஓட்டையும் உடைக்கும் விஜய் சீமான் ஓட்டையும் உடைப்பார் என்று சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், ஆளுங்கட்சியான  திமுக -வின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடி வருகிறார்.

 தமிழ்நாட்டை இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டு வருகிறார்கள். கட்சி அரசியல், தேர்தல் அரசியலை தான் அனைவரும் செய்து வருகிறார்கள். மக்கள் அரசியலை யாரும் செய்யவில்லை.

 மகளிர் உரிமைத் தொகையை இப்போது எதற்காக கொடுக்க வேண்டும். ஏமாறுவார்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இந்த ஆட்சியில் இதுவரை ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை அனைவருக்கும் சமமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு திட்டத்தை இந்த அரசு கூறட்டும்.

இலவச மின்சாரம் இலவச பஸ் பாஸ் இது தற்போது தேவையா? கேடுகெட்ட கேவலமான ஆட்சியை செய்து கொண்டு இது சாதனை என்று இந்த அரசு சொல்கிறது. நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்னுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டார்களே என்று இந்த அரசை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன். திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பாரதியாரை பற்றி எங்கும் பேசுவேன் எதிலும் பேசுவேன்.

திராவிட கழகம் பாரதியாரைப் பற்றி ஒரு கூட்டத்தை நடத்தினால் அதிலும் நான் பேசுவேன்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com