மெரினா கடல்கரையில் சீற்றம்

மெரினா கடல்கரையில் சீற்றம்

பட்டினப்பாக்கம்மெரினா கடற்கரை கடல் சீற்றம்
Published on

சென்னை பட்டினம்பாக்கத்தில் காலை முதலே கடல் அலை அதிகளவில் சீற்றத்துடன் காணப்படுகிறது.சுமார் 2 மீட்டர் தூரத்துக்கு கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.கடல் சீற்றத்தால் 2 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து சீறிப் பாய்ந்தன.

மேலும் அதிகளவில் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பட்டினம்பாக்கத்தில் கடற்கரையில் 20 க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.சீற்றம் அதிகமாக இருக்கும் நிலையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றால் சிரமமாக இருக்கும் என்பதால் பட்டினம்பாக்கம் மீனவர்கள் கடலுக்கு இன்று செல்லவில்லை.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே கடல் சீற்றத்தால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மணல் கலந்த கடல் நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com