ஜெம் வீரமணி வழக்கில் 'பலே' கட்டப்பஞ்சாயத்து.. 12 கோடி வேணும் என அடம்பிடித்த சாந்தி? யார் அந்த "காங்கிரஸ் மாவட்ட தலைவர்"?

வீரமணி நடத்தும் ரிசார்ட், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் வீரமணிக்கு சொந்தமான பள்ளி என பல கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Police Raid Gem Veeramani House and Offices
ஜெம் வீரமணி வழக்கில் 'பலே' கட்டப்பஞ்சாயத்து.. 12 கோடி வேணும் என அடம்பிடித்த சாந்தி? யார் அந்த "காங்கிரஸ் மாவட்ட தலைவர்"?AI Generated
Published on
Updated on
1 min read

தொழிலதிபரும் பெரும் பணக்காரருமான ஜெம் வீரமணி மீதான போக்சோ பாலியல் குற்ற வழக்கில் தினமும் புதிய திருப்பங்கள் வருகின்றன. தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்புகின்றன.

இதுவரை நடந்துள்ள கைதுகள்

வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவருடைய கணவரும், ஜெம் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான மகேந்திர சிம்ஹம் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து, கடந்த 29.08.2026 அன்று கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று வீரமணியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேசன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேசனின் நண்பரும் SRMU கண்ணையாவின் மகனுமான பிரகாஷ் என்பவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வீரமணி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

வீரமணி நடத்தும் ரிசார்ட், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் வீரமணிக்குச் சொந்தமான பள்ளி எனப் பல கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஜெம் வீரமணி தனக்கு எதிரான புகாரை நீர்த்துப்போகச் செய்ய திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செட்டில்மென்ட் செய்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வீரமணி தொடர்பான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

கட்டப்பஞ்சாயத்து செய்த அரசியல் தலைவர்கள்

இப்போது அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வீரமணி மற்றும் சாந்திக்கு இடையே பணத் தகராறு இருந்துள்ளது. இதனைத் தீர்க்க சாந்தி ஒரு காங்கிரஸ் மாவட்டத் தலைவரை அணுகியுள்ளார். அவருக்கு வீரமணியின் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். வீரமணி சார்பாக தென் மாவட்டத்தில் அரசியல் கட்சி நடத்தும் ஒருவர் பஞ்சாயத்தில் இறங்கியுள்ளார்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவரை மிரட்டி செட்டில்மென்ட் பேசியிருக்கிறார்.

பேரம் பேசிய அந்த காங்கிரஸ் தலைவர், ரூ.7 கோடி வாங்கித் தருவதாகவும், அதில் ரூ.2 கோடியை தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் சாந்தியிடம் கூறியுள்ளார். “என்னுடைய தேவையே ரூ.12 கோடி இருக்கிறது” எனக் கூறி கட்டப்பஞ்சாயத்தை சாந்தி மறுத்துள்ளார். தங்களுக்கு பணம் கிடைக்காததால், அரசியல் தலைவர்கள் இருவரும் இணைந்து சாந்தியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இன்னும் பல அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மற்றும் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Police Raid Gem Veeramani House and Offices
"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com