ஜெம் வீரமணி வழக்கில் மகனுக்கு ‘Look Out Notice’.. 2008-லேயே ரயில்வே பணியை ராஜினாமா செய்த கண்ணையா - 18 ஆண்டுகளாக SRMU-வில் அதிகாரத்தில் இருப்பது எப்படி?

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக SRMU அமைப்பில் அசைக்க முடியாத சக்தியாகவும், நிர்வாக முடிவுகளைத் தீர்மானிப்பவராகவும் இருந்து வருகிறார் கண்ணையா.
MK Stalin and Kannaiah - Gem Veeramani
ஜெம் வீரமணி வழக்கில் மகனுக்கு ‘Look Out Notice’.. 2008-லேயே ரயில்வே பணியை ராஜினாமா செய்த கண்ணையா - 18 ஆண்டுகளாக SRMU-வில் அதிகாரத்தில் இருப்பது எப்படி?
Published on
Updated on
2 min read

ஜெம் வீரமணி வழக்கில் ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் பிரகாஷ், தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ரயில்வேயில் கார்ப்பரேட் ஊடுருவலுக்கு எதிரான போராட்டம், தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுக்காக செய்திகளில் வரும் கண்ணையாவின் பெயர், தற்போது முற்றிலும் வேறுபட்ட செய்திக்காக அடிபடத் தொடங்கியிருக்கிறது.

கண்ணையா 2005-ஆம் ஆண்டு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் (எஸ்ஆர்எம்யு) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், யூனியனில் அதிகாரத்தில் இருந்து வருகிறார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக SRMU அமைப்பில் அசைக்க முடியாத சக்தியாகவும், நிர்வாக முடிவுகளைத் தீர்மானிப்பவராகவும் இருந்து வருகிறார்.

இந்திய தொழிற்சங்கச் சட்டம், 1926-ன் படி, ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

யூனியனின் மொத்த நிர்வாகிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் (பொதுவாக 50% வரை) “வெளிநபர்களாக” (Outsiders) இருக்கலாம் என்ற சட்டப்பூர்வ அனுமதி உள்ளது.

எனவே, 2008-ஆம் ஆண்டு ரயில்வே பணியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறினாலும், யூனியன் பதவிகளில் தொடர்ந்து நீடிக்கிறார்.

தொழிற்சங்கத் தேர்தல்களில் வென்று, தொடர்ந்து 5 முறை அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் (AIRF) தலைவராக உள்ளார்.

இதுபோன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்து பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் போக்கு தொழிற்சங்கங்களில் தொடர்கிறது.

கண்ணையா, தமிழ்நாட்டில் யார் ஆளும் கட்சியாக இருந்தாலும், அவர்களுடன் நெருக்கமான உறவைப் பேணக்கூடியவர் என்கின்றனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டாலினின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கே சென்று வாழ்த்து தெரிவிப்பார், தனது வெற்றிகளுக்கு வாழ்த்துகளைப் பெறுவார்.

இது பொதுவெளியில் காணப்பட்ட உறவு என்றால், குடும்ப அளவிலும் இருவருக்கும் நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணையாவின் மகன் பிரகாஷ், திமுகவுக்கு ஆதரவாக பட்டுவாடா உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடலாம் என, 2021 மார்ச் மாதம் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அந்தச் சோதனையின்போது கண்ணையாவின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினருக்கு எதிராகத் திரண்டு, அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது பிரகாஷ், ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தப்படுகிறார். வீரமணியின் வீடியோவை வைத்திருந்த நீண்டகால ஊழியரான கணேசன், பிரகாஷின் நண்பர் எனக் கூறப்படுகிறது. கணேசனின் டைரியில் பல்வேறு பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரகாஷுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்றைய தினம் சோதனைகளைத் தொடங்கிய காவல்துறை, பிரகாஷ் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் கூறியுள்ளது. அங்கு கிடைத்துள்ள தரவுகள் இந்த வழக்கை எந்த திசைக்கு திருப்பப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

MK Stalin and Kannaiah - Gem Veeramani
"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com