
உணவுப் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி , சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நெகமம் பருத்தி, மார்த்தாண்டம் தேன், மயிலாடி கல்சிற்பம், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, தைக்கால் பிரம்பு ஊஞ்சல் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலேயே 56 புவிசார் குறியீடுகளை பெற்று தற்போது தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இதுவரை புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்