தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அலுவலர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார் புவிசார் குறியீடு அட்டார்னி சஞ்சய் காந்தி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
தமிழ்நாட்டில் மொத்தம் 145 பொருட்களுக்கு புவிசார் குறியீடு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் வரை 50 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்
மேலும் மிக விரைவில் கும்பகோணம் வெற்றிலை சேலம் மாம்பழம் டெல்டா மாவட்டத்தில் விளையும் சீரக சம்பா அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் மொத்தம் 1462 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, இவற்றில் 658 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக கூறினார்.
தஞ்சை மாவட்டத்திற்கு 10 பொருட்கள் உட்பட தமிழகத்தில் 50 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது இதன் மூலம் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது என பெருமிதத்துடன் கூறினார்.
இன்று நடந்த நிகழ்வில் ஐம்பொன் சிலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசை சொசைட்டிக்கு சுவாமிமலை வெண்கல சிலைக்கான புவிசார் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் தஞ்சாவூர் கைவினை கலைஞர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சொசைட்டிக்கு தஞ்சாவூர் பொம்மை பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை சஞ்சய் காந்தி வழங்கினார்.