கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு ...கண்ணீர் விட்டு வாக்குமூலம் அளித்த சுவாதி மயக்கம் ...

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு ...கண்ணீர் விட்டு வாக்குமூலம் அளித்த சுவாதி மயக்கம் ...
Published on
Updated on
3 min read

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் சுவாதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனுதாக்கல் செய்த யுவராஜ் : 

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், இறக்கும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதே போல் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சுவாதி ஆஜர் :

சுவாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவை அடுத்து சுவாதி இன்று மதுரைக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

வாக்குமூலம் அளித்த சுவாதி :

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாக்குமூலம் அளித்த சுவாதி, சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என்று கூறினார். கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என சுவாதி தெரிவித்தார். உண்மையை மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நீதிபதி கேட்கவே கதறி அழுது கண்ணீர் விட்டவாரே வாக்குமூலம் அளித்தார்.

நீதிபதியின் கேள்வியும் சுவாதியின் பதிலும் :

நீதிபதி : 23ஆம் தேதி நடந்த சம்பவம் எதுவுமே உங்களுக்கு ஞாபகத்தில் இல்லை,பிறகு புகைப்படத்தை காட்டியதும் அடையாளம் காண்பித்தது எப்படி?

சுவாதி பதில் : காவல்துறையினர் புகைப்படத்தை காட்டி சொல்ல சொன்னார்கள் சொன்னேன்.

நீதிபதி :  உங்களுக்கு சித்ரா என்பவரை தெரியுமா?

சுவாதி பதில் : எனக்கு தெரியாது அவர்களை பற்றி நான் கேள்விப்பட்டது கூட இல்லை.

நீதிபதி : காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது இவர்களுடன் நீங்கள் இருந்தீர்களா?

சுவாதி பதில் : இல்லை .

நீதிபதி :  சுவாதி தனது போன் நம்பரை தனக்கு ஞாபகம் இல்லை,இதற்கு நீதிபதிகள் இன்ஜினியரிங் படித்தீர்களா இல்லையா என்பது போல் கேள்வி எழுப்பி அதனை முதலில் படித்து கூறுங்கள் என ஆவணத்தை கையில் கொடுத்தனர்,

சுவாதி பதில்  : தொலைபேசி எண் என்னுடையது இல்லை இது போன்ற தொலைபேசி எண் என்னிடம் இல்லை 

நீதிபதி :  அதில் இருக்கக்கூடிய புகைப்படம் யாருடையது ?

சுவாதி பதில்  : அந்த புகைப்படம் என்னுடையது தான்

மயங்கி விழுந்த சுவாதி :

இவ்வாறு கூறிய பிறகு நீதிபதிகள் ,உங்களுக்கு தெரியாத பட்சத்தில் அவர்களுக்கு உங்களுடைய மொபைல் எண் தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளனர்.இந்நிலையில் சாட்சி அளித்து கொண்டிருந்த சுவாதி திடரீன நீதிமன்றத்தில் மயக்கம் போற்று விழுந்துள்ளார்.தற்போது சுவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com