

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,000-க்கும் கீழ் குறைந்து நடுத்தர குடும்பங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், அவ்வப்போது பெரிய அளவில் சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ₹3,000-க்கும் மேல் குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சிறிய ஆறுதலை தந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.12,815க்கு விற்பனையாகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தங்கம் விலை 13 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. இன்றைய 22K ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 12,815க்கும் 1 சவரன் ரூ. 1,02,520-கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு சவரன் ரூ. 1,11,840 விற்பனை ஆகிறது.
கடந்த ஐந்து நாட்களை பொறுத்தவரை, கடந்த நவம்பர் 8-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,280-க்கும், 9-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040 ஆக இருந்தது. அதன் பின்னர் நவம்பர் 10-ந்தேதி சவரன் ரூ.1,05,680-ஆக குறைந்தது. அதைத்தொடர்ந்து இன்றும் சவரன் ரூ.1,02,520 ஆக குறைந்துள்ளதன் மூலம், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு மொத்தம் ரூ.3,520 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் எந்தமாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 200-க்கு விற்பனை ஆகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.