ஒரு காலத்தில் வீட்டில் உள்ள உண்டியலை தவிர, பணத்தை சேமிக்க பெரிய அளவில் பிற வழிகளை மக்கள் நாடியதில்லை. அதன் பிறகு தான் மக்களுக்கு அரசாங்கமே, நல்ல வட்டிவிகிதங்களுடன் தங்கள் பணத்தை சேமிக்க பல வழிகளை உருவாக்கியுள்ளதை அறிந்து அதில் சேமிக்க துவங்கினர். அஞ்சலகம் என்பது தான் 90 சதவிகித மக்களின் முதல் சேமிப்பு இடமாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய தேதியில் சேமிப்பு என்று பார்க்கும்போது, அதற்கான வழிகள் பரந்துவிரிந்து கிடக்கிறது.
எல்லா சேமிப்புகளும் சிறந்ததா?
அதிகம் லாபம் கிடைக்கும் என்று நம்பி, சில இடங்களில் பணத்தை போட்டு, மக்கள் ஏமாறும் கதைகள் பல கேட்டிருப்போம். ஆனால் நிதானமா வட்டி விகிதத்தோடு அரசே ஏற்று நடத்தும் பல சேமிப்பு திட்டங்கள் இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஆகையால், மக்கள் அதிக வட்டி கிடைக்கிறது என்று நம்பி போலியான ஆசாமிகளை நம்பி பணத்தை சேமித்து ஏமாறாமல், அரசு தரும் நல்ல திட்டங்களில் இணைந்து பலனடையலாம்.
அதே நேரம் ஷேர் மார்க்கெட் எனப்படும் பெரிய கடலில் நீந்த பழகியவர்கள், நிச்சயம் அதிலும் இன்வெஸ்ட் செய்து பெரிய பலனடையலாம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
சரி விஷயத்திற்கு வருவோம், இந்த செய்தியின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளதை போல அரசு வழங்கும் பத்திரங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதில் சிறந்தது எது என்ற குழப்பம் இருக்கும். ஆகவே இந்த செய்தியில் மூன்று முக்கிய அரசு பத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.
நிலையான வட்டி பத்திரங்கள்
அதாவது Fixed Interest Bonds, மத்திய மற்றும் மாநில அரசுகளே விற்கும் பத்திரங்களில் அதிக லாபம் தரும் ஒன்றாக உள்ளது இந்த நிலையான வட்டி விகிதம் கொண்ட பத்திரங்கள். இதை சில தனியார் நிறுவனங்கள், அல்லது அஞ்சலகம் மூலம் உங்களால் வாங்க முடியும். ஆனால் ஆண்டில் சில வாரங்கள் அல்லது நாள்களில் மட்டுமே இது விற்பனைக்கு வரும்.
நீங்கள் வாங்கும் பத்திரங்கள் 5, 10, அல்லது 15 என்று முதிர்ச்சி காலத்தை கொண்டிருக்கும். ஆகவே முதிர்ச்சி காலம் முடிந்ததும் நீங்கள் பத்திரம் வாங்கிய தொகையுடன் சேர்த்து நிலையான வட்டியுடன் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.
பணவீக்கம் சார்ந்த பத்திரங்கள்
Inflation-Related Returns, மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து இந்த வகை பத்திரங்களின் தன்மை மாறும். பங்கு சந்தை மீது அதிக நாட்டம் கொண்ட நபர்கள் இவ்வகை பத்திரங்களில் இப்போது அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதில் கிடைக்கும் லாபமும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அரசே இவ்வகை பத்திரங்களை விற்பனை செய்வதால், இதில் ரிஸ்க் என்பது துளிகூட இருக்காது. இதுபோல் அரசு இன்னும் பல வகை பத்திரங்களை விற்பனை செய்து வருகின்றது.
GOI சேமிப்பு பத்திரங்கள்
முன்பே கூறியதை போல இவை மத்திய மற்றும் மாநில அரசால் ஆதரிக்கப்படும் பத்திரங்கள். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிடைத்த தகவலின்படி, இவ்வகை பத்திரங்கள் சுமார் 8.05 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க, அதே நேரம் சிறந்த லாபத்தை பெற இவ்வகை பத்திரங்கள் பெரிதும் உதவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்