டயர் வெடித்து நிலைதடுமாறிய அரசு பேருந்து... சாலையின் தடுப்பில் மோதி விபத்து...

பூந்தமல்லியில் டயர் வெடித்ததில் நிலைதடுமாறிய அரசு பேருந்து, சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
டயர் வெடித்து நிலைதடுமாறிய அரசு பேருந்து... சாலையின் தடுப்பில் மோதி விபத்து...
Published on
Updated on
1 min read
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன.
இந்த நிலையில் திருநின்றவூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்த அரசு பேருந்து, பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,  முன்னால் சென்ற வேன் மற்றும் கார் மீது மோதி சாலையின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் ஓட்டுனர் உள்பட ஐந்து பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com