பணியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது - நீதிமன்றம் உத்தரவு!

பணியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது - நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

பணியிடங்களை நிரப்புமாறு அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ஈரோடு மாநகராட்சியில் நகரப் பொறியாளராக பணியாற்றி வரும் ஒருவர், மாநகராட்சிகளில் தலைமைப் பொறியாளர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அப்பதவிக்கு நியமனம் செய்யுமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், ஒரு பணியிடத்தை அரசு தான் நிரப்ப முடியும், குறிப்பிட்ட காலியிடத்தை நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது. எனவே, மனுதாரரின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com