"விவசாய நிலங்களை அழிக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது" - அன்புமணி ராமதாஸ்.

"விவசாய நிலங்களை அழிக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது" - அன்புமணி ராமதாஸ்.
Published on
Updated on
1 min read

விவசாயிகளின் மீதான விரோத போக்கை அரசு கைவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்திள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவா்., தமிழ் நாட்டின் கடனை அடைக்க 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர் எனவும் இதுபோன்று வேடிக்கை வேறு எங்கும் பார்க்க முடியாது என அவா் குற்றம்சாட்டினா். 

நெல்லையில் நடைபெறும் பாமக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-  

“  தாமிரபரணி நதி இணைப்பு திட்டம் பல ஆண்டுகளக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனையெல்லாம் தமிழக நிதி துறை அமைச்சர் பார்க்கட்டும். தமிழகத்தில் கடன் சுமையை தங்கம் தென்னரசு குறைக்கட்டும். கடன் வாங்கவில்லை என சபாநாயகர் கூறிவருகிறார். அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். கடனை அடைக்க கடன் வாங்கியது திமுக ஆட்சியில் தான். இந்த வேடிக்கை வேறு எங்கும் பார்க்க முடியாது.

தமிழகத்தின் மொத்த கடன் 12.53 லட்சம் கோடி. இதில் பொதுத்துறை கடன் 4.5 லட்சம் கோடி,நிர்வாகத்துறை கோடி 7.25 லட்சம் கோடி.  அதிமுக ஆட்சி கடன் வாங்கிகொண்டிருக்கிறார்கள் என திமுக குறை சொன்னது.2 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. பழைய கடனை அடைத்து அதற்கு வட்டி கட்டுவதற்கு 51 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். கடன் தொடர்பான இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் திவாலாகிவிடும்”,  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com