ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிப்பு!

Published on

மதுரை காமராஜர் பல்கலைகழக மாணவர்களுக்கு  ஆளுநர் ஆர்.என்.ரவி  பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு  மாணவ மாணவிகளுக்கு முனைவர் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த விழாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 531 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. 602 பேருக்கு முனைவர் பட்டமும், 143 பேர் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

கல்லூரியில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள், அதேபோல் பருவத்தேர்வு முறையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக ஆளுநர் வருகையை முன்னிட்டு காமராஜர் பல்கலை வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com