காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு...மத்திய அரசுக்கு வாழ்த்து சொன்ன சேகர்பாபு!

காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு...மத்திய அரசுக்கு வாழ்த்து சொன்ன சேகர்பாபு!
Published on: 
Updated on: 
1 min read

காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு என நிலையில்லாத ஆளுநரை தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்த மத்திய அரசு வாழ்க என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 6 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது எனவும், ஒரே சமயத்தில் 50 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் குறித்து காலையில் ஒரு அறிவிப்பு மாலையில் ஒரு அறிவிப்பு என நிலையில்லாத ஆளுநரை தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்த மத்திய அரசு வாழ்க என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com