நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன் அடிப்படையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுருந்தது.இதையடுத்து ஆளுநரின் அழைப்பை ஏற்று தமிழ் நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரிய சாமி கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி செந்தில், அரக்கோணம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்., பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை ,துணை தலைவர் வி பி துரைசாமி ,நாராயண திருப்பதி மற்றும் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.
அதேபோன்று அதிமுக ஓபிஎஸ் அணியிலிருந்து ஆளுநர் தேநீர் விருந்து யாரும் பங்கேற்கவில்லை.சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், திரைபிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், குடியரசு தின அலங்கார ஊர்திக்கான முதல் பரிசை காவல்துறை ஊர்தி சார்பில் தமிழக டிஜிபிக்கு ஆளுநர் வழங்கினார்.இரண்டாவது பரிசை தீயணைப்புத்துறை அலங்கார ஊர்தி பெற்று கொண்டது. செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு மூன்றாம் பரிசு வழங்கபட்டது.
சமூக சேவை , சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டது. வனிதா மோகன் என்பவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ் 10லட்சம் ரூபாய் பரிசை ஆளுநர் வழங்கினார்.