பாரதியார் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை ..!

பாரதியார் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை ..!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பாரதியார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி மணி மண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ. வி. மார்க்கண்டேயன்,

கோவில்பட்டிய வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பாரதி அன்பர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com