“தவறுதலாக இணைப்பைக் கொடுத்த ஊழியர்கள்” - மின்சாரம் சரி செய்ய கம்பம் மீது ஏறிய மாணவன்.. அலட்சியத்தால் பறிபோன அப்பாவி உயிர்!

ஊழியர்கள் நெடுநேரமாகியும் வரவில்லை என்பதால் மின்சார துண்டிப்பை சரிசெய்ய தமிழரசன்
tamilarasan
tamilarasan
Published on
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மீனுர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவருக்கு 18 வயதில் தமிழரசன் என்ற மகன் உள்ளார். தமிழரசன் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரின் வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் சொல்லியும் பெருதும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். வழக்கம் போல இன்றும் தமிழரசன் ஏரியாவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகாரளித்த நிலையில் வந்து பார்த்து விட்டு சரிசெய்கிறோம். என்று சொன்ன ஊழியர்கள் நெடுநேரமாகியும் வரவில்லை என்பதால் மின்சார துண்டிப்பை சரிசெய்ய தமிழரசன் அங்கிருந்த மின்சார கம்பியின் மீது ஏறி சரி செய்யும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதே சமயத்தில் மின் ஊழியர்கள் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இணைப்பு சரியாக செயல்படுகிறதா என பரிசோதிக்க மின்சார இணைப்பை வழங்கியபோது, அங்கு தனது வீட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தமிழரசன் மின்சாரம் தாக்கி மின் கம்பியில் மாட்டி அங்கேயே உயிரிழந்துள்ளார். 

Admin

அக்கம்பக்கத்தினர்  தமிழரசனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தமிழரசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உறவினர்கள் கண்முன்னரே தமிழரசன் துடிதுடித்து இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இவரது உறவினர்கள் குடியாத்தம் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com