"ஜனவரி 1 முதல் R.S. பாரதி அரை மீசை பாரதி" - மாணிக்கம் தாகூரின் நக்கலான விமர்சனம்! "உள்ளாட்சி தேர்தலில் வெல்லுமா தவெக?"

"அவரை அரை மீசையில் பார்ப்பதற்கு எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்" என்று நக்கலாகவும் பதிலளித்துள்ளார்.
Congress MP Manickam Tagore
Congress MP Manickam TagoreCongress MP Manickam Tagore
Published on
Updated on
1 min read

திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியின் அகங்காரத்திற்கும், ஆணவத்திற்கும்தான் மக்கள் கடந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகவும், இனியாவது அவர் மக்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் ஏதேனும் ஒரு இடத்தில் தவெக வெற்றிபெற்றால் தனது ஒருபக்க மீசையை எடுப்பதாக ஆர். எஸ். பாரதி கூறியதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதாவது, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அவர் அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார் என்று விமர்சித்தார். "அவரை அரை மீசையில் பார்ப்பதற்கு எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்" என்று நக்கலாகவும் பதிலளித்துள்ளார்.

தவெக 2 மேயர்களுக்கு மேல் வந்துவிட்டால் தனது ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்வதாக அவர் கூறியதற்கு அமைச்சர் நிர்மல் குமார், என்ன பேசுவது என்று தெரியாமல் இவர் தினமும் பேசுவதாக அவர் கூறினார். மேலும், தற்போது உள்ள அரசு எவ்வாறு செயல்படுகிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். இவர் ஒரு பக்கம் மீசையை எடுப்பது ஒரு பெரிய விஷயமா ஒரு ரேசர் இருந்தால் எடுத்துவிடலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்திருந்தார். முன்னதாக 7ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர். எஸ். பாபு, "தளபதிக்கோ அல்லது உதயநிதிக்கோ சவால் விடும் தகுதி ஆதவ் அர்ஜுனாவிற்கு கிடையாது" என்று அவர் பேசினார். மேலும்,1984 தேர்தலில் அமெரிக்காவில் இருந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.

அப்போது திமுக அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக கூட வரவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் ஏறத்தாழ 102 நகராட்சியில் 90 நகராட்சியில் வெற்றிபெற்றதாக அவர் கூறினார். மேலும், ஜனவரியில் வரும் தேர்தலில் தவெகவை சேர்ந்த ஒரு மேயர் வென்றாலும் மீசையை எடுத்துக்கொள்கிறேன் என்று பேசினார். இவரது இந்த பேச்சிற்கு மாணிக்கம் தாகூர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com