
மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3% சதவீத அகவிலைப்படியை நீதியின் அடிப்படையில் உடனடியாக வழங்கிட வேண்டும் என மின்வாரிய முன்னாள் ஊழியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 3% அகவிலைபடியை வழங்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு முடக்கபட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அண்ணா சாலையில் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள் அரை நிர்வாண ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆண்கள் அரை நிர்வாணத்திலும், பெண்கள் முகத்தில் கருப்பு துணியை கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.