கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி... கையும் களவுமாக பிடிக்க முயன்ற கணவன்... தூக்குப் போட்டு தொங்கிய கள்ளக்காதலன்...

கள்ளக்காதல் வெளிப்பட்டதால் தற்கொலை வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி... கையும் களவுமாக பிடிக்க முயன்ற கணவன்... தூக்குப் போட்டு தொங்கிய கள்ளக்காதலன்...
Published on
Updated on
1 min read

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சிவசக்தி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சுப்புலட்சுமி சிவசக்தியுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவனை பிரிந்த நேரத்தில் மதுரை பாலமேட்டை சேர்ந்த செல்வகுமார் என்பருடன் சேர்ந்துவிட்டார் சுப்புலட்சுமி. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று சிவசக்தி மனைவியை தேடி அவரது வீட்டுக்கு சென்றபோது சுப்புலட்சுமி செல்வகுமாருடன் உல்லாசமாக இருப்பதை கண்ட சிவசக்தி சுப்புலட்சுமியை கண்டித்துள்ளார். அதற்கு சுப்புலட்சுமி உங்களுடன் சேர்ந்துவாழ விருப்பமில்லை, இனி என்னைத் தேடி வரவேண்டாம் என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து இவர்களின் கள்ளத்தனத்தை ஊரறிய வைக்க சிவசக்தி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் குடியிருந்தவர்கள் அங்கு கூடிவிட்டனர்.

மேலும் கள்ளக்காதல் பற்றி சொல்லி போலீசாரையும் வரவைத்துள்ளார் சிவசக்தி. செல்வகுமாரை வெளியே போகவிடாமல் தடுத்து வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார், போலீசிடம் சிக்கினால் தனக்கு அவமானம் என்று நினைத்து வீட்டிற்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் போலீசார் செல்வகுமாரின்  உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அற்ப சந்தோஷத்திற்கு ஆசைப்பட்டு முறையற்ற உறவால் அவமானப்பட்டு உயிரைவிட்ட செல்வகுமார் போன்று பல செல்வகுமார்களும், சுப்புலட்சுமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com