கொள்கையை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டாரா EPS? "மாப்பிள்ளை தேடி தான் பொண்ணு வருவாங்க" டெல்லி சென்ற.. இபிஎஸ்யை சாடிய ரவீந்திரநாத்

அதிமுகவை அபகரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா இரண்டு தலைவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த
EPS
Published on
Updated on
2 min read

மாப்பிள்ளை தேடி பொண்ணு வருவாங்க கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்ற இபிஎஸ் குறித்து சாடிய தேனி முன்னாள் எம்பி ரவீந்திரநாத். அண்ணா அறிவாலயத்தை தேடித்தான் அத்தனை கூட்டணி கட்சிகளும் வந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும்” எனும் தலைப்பில் நேற்று
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதிமுக  கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்காக சில தினங்களுக்குமுன் டெல்லி சென்றதை குறித்து ரவீந்திரநாத் “அதிமுக கூட்டணி கிடையாது… என்டிஏ டெல்லி  தான் தலைமை. ஒரு கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து இந்த தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்க எங்கே போவார்கள். ஒரு வீட்டில் முதன் முதலாக கல்யாணம் ஆகக் கூடிய வீட்டில் மாப்பிள்ளையை தேடி பொண்ணு போவாங்க ஆனால் இவர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நமது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அதை தலைமையாகக் கொண்ட தளபதி அவர்களை தேடி, அண்ணா அறிவாலயத்தை தேடித்தான் அத்தனை கூட்டணி கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடித்துள்ளனர்" என்று விமர்சித்தார்.

அதிமுகவை அபகரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்றைக்கு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி , அம்மா இரண்டு தலைவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த அந்த இயக்கத்தை தொண்டர்களுக்கு கொடுத்த அந்த உரிமையை பறித்து அடமானம் வைத்து விட்டார் என்றும் எடபாடியார் குறித்து பேசியிருந்தார். 

அதனையடுத்து பன்னிர்செல்வம் குறித்து பேசிய ரவீந்திரநாத்  “ஓபிஎஸ் கடைசி வரைக்கும் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எப்படியாவது புத்தி வந்துவிடும் என்றும் தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் என்று அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டார். “ஆனால் ஓபிஎஸ் -ன் அமைதி பலவீனம் என தப்பாக எடை போட்டு விட்டார்கள்.  பலவீனம் இல்லை அது புதிய விடியலுக்கான அமைதி என்பது இப்போது உணர்ந்து இருப்பார்கள்” என்றும் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

அதை தொடர்ந்து  அதிமுகவின் அத்தனை அடிமைகளும் தங்களுடைய கொள்கைகளை டெல்லியில் அடமானம் வைத்து விட்டு தொண்டர்களின் கோரிக்கை உரிமைகளை பறித்துவிட்டு தமிழ்நாட்டு மக்களை வாக்குகளுக்காக மட்டும்,ஓட்டுக்களாக மட்டும் இவர் எப்படி முதலமைச்சர் ஆக முடியும் என்றும் “அவர் மக்கள் செல்வாக்குள்ள தலைவராக இந்த இயக்கத்தை வழி நடத்தவில்லை” என்றும்  எடப்பாடியாரை  விமர்சித்திருந்தார்.

மேலும் “மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் அண்ணா, கலைஞர்,புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, இப்போது நம்முடைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலினுக்கு மட்டும்தான் எதிர்த்து யாருமே கிடையாது” என தேனீ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com