"Leo Das -ஆக நினைத்துக் கொண்டு.. ஒரே மாதிரி அடுத்தடுத்து குற்றங்கள்" - விஜய் அரசை விளாசிய இபிஎஸ்! எழுப்பிய முக்கிய கேள்விகள் என்ன?

கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
EPS criticises CM Vijay
EPS criticises CM Vijay
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் அடுத்தடுத்து சட்டஒழுங்கு பிரச்சனைகளை அதிகரித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப்பக்கத்தில் முதல்வர் விஜய்யை காட்டமாக விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடுத்தடுத்து குழந்தைகள் காணாமல் போவது, கொலைகள் நடப்பது, சாதிய பாகுபாடு போன்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டு முதல்வர் விஜயை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.

•சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,

•கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,

•கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், திரு. விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை “#LeoDas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?

ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?

இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா? சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வரை, காணாமல்போன குழந்தைகள் தற்போது வரை தகவல்கள் கிடைக்கவும் இல்லை. மேலும், அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com