ஆணழகன் போட்டியில் பங்கேற்கும் தலைமைக்காவலர்... காவல் ஆணையர் நேரில் பாராட்டு...

ஆணழகன் போட்டியில் பங்கேற்கும் தலைமைக்காவலர்... காவல் ஆணையர் நேரில் பாராட்டு...

உலக  ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும்  காவல் தலைமைக்காவலரை நேரில் அழைத்து சென்னை காவல்  ஆணையர் வாழ்த்தி நிதி வழங்கினார்.
Published on

சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் புருஷோத்தமன்  கடந்த 2000 மற்றும் 2001 ஆகிய 2 ஆண்டுகள் மற்றும் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றுள்ளார். 

காவல் துறையினருக்கான அகில  இந்திய போட்டியில்   கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம்  பெற்றுள்ளார். இந்நிலையில் தலைமைக்காவலர் புருஷோத்தமன் வருகிற 01.10.2021 முதல் 07.10.2021 வரை உஸ்பெகிஸ்தான் நாடு தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இதனையறிந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  தலைமைக்காவலர் புருஷோத்தமனை நேரில்  அழைத்து பாராட்டினார்.  உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள பணம்  ரூ.75 ஆயிரம் வழங்கி, வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com