"வாழ்வில் முதல் 1000 நாட்கள்"- திட்டம்; பயன்பெறும் 74,400 தாய்மார்கள்!

"வாழ்வில் முதல் 1000 நாட்கள்"- திட்டம்; பயன்பெறும் 74,400 தாய்மார்கள்!
Published on
Updated on
1 min read

'வாழ்வில் முதல் 1000 நாள்' சிறப்பு திட்டத்தை தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்திய மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் - 38.20 கோடி மதிப்பீட்டில் 74,400 தாய்மார்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துதுறை திட்டகுழு சார்பில் வாழ்வில் முதல் 1000 நாட்கள் என்ற புதிய திட்டத்தின் அறிமுக விழா மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

இதுகுறித்து பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 478 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளில் 74400 குழந்தைகள் பிறந்துள்ளன. வாழ்வில் முதல் 1000 நாட்கள் திட்டத்தின் மூலம் 38.20 கோடி  மதிப்பீட்டில் தாய்மார்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், கர்ப்ப காலம் முதல் மகப்பேறு முடிந்து ஒருவருடம் வரை உள்ள 1000 நாட்கள் மூன்று காலங்களாக கணக்கிட்டு, அந்த காலத்தில் 7 தவணைகளில் தலா 5000 ரூபாய் இத்திட்டத்தின் மூலம் வழங்க உள்ளதாக கூறியுள்ளார். 

அதே போல், தாய்மார்களுக்கு கர்ப்பகால ரத்தசோகை, பேறுகால எடைகுறைவு, குழந்தையின் முறையான வளர்ச்சி மற்றும் தடுப்பூசி   ஆகியவை தாய்மை செயலி மூலம் கண்காணித்து, சிக்கல் உள்ளவர்களை ஆரம்பசுகாதார நிலையத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்கப்படும் என கூறிய அவர், எதிர்காலத்தில் வாழ்வில் முதல் 1000 நன்னாட்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை போக்க காலியாக உள்ள 1021 மருத்துவர்கள் மற்றும் 980 மருந்து ஆளுநர்கள் ஆகியோர் கூடிய விரைவில் பணியமர்த்தப்பட்டு பணி ஆணைகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com