பகலில் கொளுத்திய வெயில்...இரவில் வெளுத்து வாங்கிய கனமழை!

பகலில் கொளுத்திய வெயில்...இரவில் வெளுத்து வாங்கிய கனமழை!
Published on: 
Updated on: 
1 min read

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. 

சென்னையில் நேற்றைய தினம் காலை முதல் வெயில் வாட்டிய வந்த நிலையில், இரவில் திடீரென மழை பெய்தது. அந்தவகையில், அடையார், மயிலாப்பூர், மந்தவெளி, ஆழ்வார்பேட்டை, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. 

அதேபோல் கிண்டி, முகலிவாக்கம், நங்கநல்லூா், மடிப்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனிடையே சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒட்டியம்பாக்கம் பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com